நீரே, அவள் கண்களில் ஆனந்த கண்ணீராய் வந்து மோட்சம் பெறு!
நெருப்பே, அவள் கைகளில் உரசும் தீக்குச்சியில் வந்து புண்ணியம் பெறு!
காற்றே, அவள் கூந்தலை தழுவி சென்று பெருமை பெறு!
நிலமே, அவள் பாதம் தொட்டு மேன்மை பெறு!
ஆகாயமே, அவளை குனிந்து பார்த்து சாந்தி பெறு!
பஞ்சபூதங்களையும் வசப்படுத்தும் நீ என் வசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக