அலுவலகக் கோப்புகளை ஒதுக்கி வைத்து என் அகக்கோப்புகளைக் கவனியடி..
அலுவலகக் கணிப்பொறிக்குக் காட்டும் கருணையை என் கண்களுக்கும்காட்டடி...
அலுவலகத் தகவலறிக்கையை விடுத்து என் காதலறிக்கையைப் பாரடி..
அலுவலகக் கொள்முதல் மற்றும் விற்பனையைப் பிறகு பார்க்கலாமடி
முதலில் என் மனதை நீ கொள்முதல் செய்து உன் மனதை விற்பனைக்குகொடடி..
அலுவலகக் கணக்கைப் புறம்தள்ளி என் கணக்கை முதலில் முடியடி..
நமக்குப் பணமா முக்கியம்..??
பாசம்தான் முக்கியமடி..
போதும் உன் அலுவலகப் பணி..
விரும்பியவற்றோடு பயணிக்கையில் பாதையின் தூரமும், சுமையும்
தெரிவதில்லை...
வா, நம் காதல் பணியைத் தொடங்கலாமடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக