செவ்வாய், 3 ஜனவரி, 2017

என்ன தேடுகிறாய்

விலைமகள்கள் விதியின் வீதியில் ஆயிரமிருக்க மூன்று வயது மழலையின் யோனியில் என்ன தேடுகிறாய்...
தாய்ப் பால் வாசனை உன் நாசியில் நுழைந்து நீயும் மனிதன்தான் என்பதை நினைவுட்டியிருக்க வேண்டாமா...
மழழை மொழி உன் இச்சையைஉடைத்திருக்க வேண்டாமா...
பிஞ்சு விரல்கள் காம வேட்கையைஅசைத்திருக்க வேண்டாமா...
காட்டுவாசிகள் கூட உயிரைதான் பலியிடுவர்கள்,அகிலமே அசையும் அலறலை பலி கேட்கிறாய்...
விலைமகளே, உன் வெறி தணிக்க போராடிரணம் போக்க மறுபிறவி வரம் கேட்பாளே...
மழலையது அலறி துடிக்கும் சத்தம் கேட்டும்,சீரழிக்கும் சீழ் பிடித்த பிணமே உன் கட்டுக்கடங்காகாமம் கண்டு நரகமே நிராகரிக்கும்...

கருத்துகள் இல்லை: