ஐந்து வயதில் காமாட்சி காக்கா கடி கடித்துகொடுத்த நெல்லிகனியின் இனிப்பும்
உடன் கோலி விளையாடிய நிஷாவின்பாவாடை வர்ணங்களும்
கூட்டாஞ் சோறு பொங்கி தின்னஅரிசி கொண்டுவந்த பொன்னிகுஞ்சலத்தின் அழகும்
வயதுக்கு வந்து விட்டதால் பம்பரம்விளையாட வராத அஞ்சலியின் முட்டை கண்ணும்
கண்களால் திமிர் காட்டி மிரட்டி படிக்க வைத்தடியூசன் டீச்சர் பெண் பவித்ராவின் முதல் தொடுதலும்
வேலை தேடி அலைந்த சிகப்பு நாட்களில்அழுக்கு லுங்கியுடன் இருக்கும் அவனுக்குகாக்கா சோறு கொடுத்த மீனாவின் மீதுள்ள ஈர்ப்பும்
சம்பள பணத்தில் பூ வாங்கி கொடுத்த முதல்காதலியின் வெட்கமும்உடன் வேலை புரிந்த இரண்டாம் காதலியான ஹெலனின் முதல் முத்தமும்
இவைகள் அவனின் அந்தபுரத்து அழகிகளின் நினைவுகளில்லை
மூளை நரம்புகளின் பாயும் அக அழகிகளின்நினைவுகள் என்ற புரிதல் அவனுக்கு தோழியானபிறகுதான் புரிந்தது
நீதான் என் அகத்தை என்றும் ஆளும் ராணி என்று சொல்லும்உன் அன்பு
சரிசமம் கேட்டோ, எனக்கும் இதுபோல் ஓரிருகாதலர்கள் இருந்தால் உன் மனநிலை குறித்தேவிவாதிக்கவோ விரும்பவில்லை
என்றும் நீதான் என் அகத்தை ஆளும் ராஜாபுரிதலில்லா அன்பில் என்றும் உயிர் இருக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக