மலம் அள்ளும் மனுசனுக்கு
மணம் என்ன
ருசி என்ன
எத செஞ்சு கொடுத்தாலும்
மூக்க பொத்தி கண்ண மூடி
தின்னுட்டு போகும் இந்த மனுஷகிட்ட
நான் எப்படி கேட்பேன் என் கை ருசிய பத்தி...
இத அள்ள
என்ன ஜாதி, என்ன குலம்
என்ன மதம், என்ன நாடு
பார்க்க ஆரும் சொல்லி தரல
எந்த வேத சாஸ்திரமும் சொல்லவில்ல
எங்க மானங்கெட்ட சுத்த பொழப்ப...
படிக்காத மனுஷ இவரு
என் மனச புரிஞ்ச இவரு
இதுக்கு தெரிஞ்சதெல்லாம்
மஞ்ச நிறமும் மூத்திர வாசமு தான்...
கனவுல கூட தண்ணி ஊத்திட்டு போங்கனுத
பெனாத்திகிட்டே இது கிடக்கு
அத கேட்டு என் அடிவயிறு பத்தி எரியிது
அதே வயிறு மறு நா சோறுக்காக
ஏங்கி தவிக்கிது,
என்ன செய்ய நாங்க
வாங்கி வந்த வரமிது
இத கேட்க எந்த நாதி இருக்கு எங்களுக்கு...
எல்லாத்தையும் அள்ளி கொட்டி
என் மார்ல சாஞ்சி வியர்வையை
வாசமென சொல்லும் இந்த மனுஷனுக்கே
எத்தன ஜென்மம் எடுத்தாலும்
முந்தானை விரிக்கும் வரம் கொடு...
இந்தாளு வேண்டுதல் எல்லாம்
தினமும் ஊத்தி கழுவ
குழாயில தண்ணி வர வேணுமின்னு தா...
அத மட்டும் நிறைவேத்து கடவுள்னு ஒன்னு இருந்தா...
மணம் என்ன
ருசி என்ன
எத செஞ்சு கொடுத்தாலும்
மூக்க பொத்தி கண்ண மூடி
தின்னுட்டு போகும் இந்த மனுஷகிட்ட
நான் எப்படி கேட்பேன் என் கை ருசிய பத்தி...
இத அள்ள
என்ன ஜாதி, என்ன குலம்
என்ன மதம், என்ன நாடு
பார்க்க ஆரும் சொல்லி தரல
எந்த வேத சாஸ்திரமும் சொல்லவில்ல
எங்க மானங்கெட்ட சுத்த பொழப்ப...
படிக்காத மனுஷ இவரு
என் மனச புரிஞ்ச இவரு
இதுக்கு தெரிஞ்சதெல்லாம்
மஞ்ச நிறமும் மூத்திர வாசமு தான்...
கனவுல கூட தண்ணி ஊத்திட்டு போங்கனுத
பெனாத்திகிட்டே இது கிடக்கு
அத கேட்டு என் அடிவயிறு பத்தி எரியிது
அதே வயிறு மறு நா சோறுக்காக
ஏங்கி தவிக்கிது,
என்ன செய்ய நாங்க
வாங்கி வந்த வரமிது
இத கேட்க எந்த நாதி இருக்கு எங்களுக்கு...
எல்லாத்தையும் அள்ளி கொட்டி
என் மார்ல சாஞ்சி வியர்வையை
வாசமென சொல்லும் இந்த மனுஷனுக்கே
எத்தன ஜென்மம் எடுத்தாலும்
முந்தானை விரிக்கும் வரம் கொடு...
இந்தாளு வேண்டுதல் எல்லாம்
தினமும் ஊத்தி கழுவ
குழாயில தண்ணி வர வேணுமின்னு தா...
அத மட்டும் நிறைவேத்து கடவுள்னு ஒன்னு இருந்தா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக