மனதில் நஞ்சையும்
செயலில் விஷமத்தையும்
வார்த்தைகளில் ஊசியை வர்ணஜாலத்துடன்
அன்பெனும் மாய முலாம் பூசி பார்ப்பவர்களை
அட்டை போல உறிஞ்சி வாழும் அறிவிலிகளே,
ஒரு நாளில் பத்துப்பேரிடம் முப்பதுவேச
முகங்களைக் காட்டி அடுத்தவர் முதுகில்லேறி
சவாரி செய்யும் உங்களின் அறியாமையை
நினைத்து பார்க்க பாவமாகதான் இருக்கிறது.
இவ்வவமான சின்னங்களைக் கண்டும்
காணாதது போல் மன்னித்துப் போகிறேன்,
சாத்தானுக்காவது விசுவாசமாயிருந்து ஒருமுகத்தைக் காட்டுங்கள்
நரகத்திலாவது இடம் கிடைக்கட்டும்...
செயலில் விஷமத்தையும்
வார்த்தைகளில் ஊசியை வர்ணஜாலத்துடன்
அன்பெனும் மாய முலாம் பூசி பார்ப்பவர்களை
அட்டை போல உறிஞ்சி வாழும் அறிவிலிகளே,
ஒரு நாளில் பத்துப்பேரிடம் முப்பதுவேச
முகங்களைக் காட்டி அடுத்தவர் முதுகில்லேறி
சவாரி செய்யும் உங்களின் அறியாமையை
நினைத்து பார்க்க பாவமாகதான் இருக்கிறது.
இவ்வவமான சின்னங்களைக் கண்டும்
காணாதது போல் மன்னித்துப் போகிறேன்,
சாத்தானுக்காவது விசுவாசமாயிருந்து ஒருமுகத்தைக் காட்டுங்கள்
நரகத்திலாவது இடம் கிடைக்கட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக